உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசும்போது கிருமிப் பரவல் தோன்றியதை அரசியலாக்குவதோ, அதன் தொடர்பில் களங்கம் கற்பிப்பதோ கூடாது.
கொரோனா கிருமி குறித்து உலகிற்கு முதலில் அறிவித்தது சீனாதான் என்பதை அவர் நினைவூட்டினார். அது எங்கிருந்து தோன்றியது என்பதன் தொடர்பில் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று சீன அமைச்சர் வலியுறுத்தினார். இந்த வாரத் தொடக்கத்தில், புதிய சூழ்ச்சிப் போர் குறித்து உலக நாடுகளை அவர் எச்சரித்தார். அமெரிக்கர்களே அந்தப் போரை நாடுவதாகச் சீனா குறைகூறுகிறது.