பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க இதை குழைத்து தேய்த்து சுத்தம் செய்து வாருங்கள்!!
பற்கள் பார்க்க வெண்மையாக இருந்தால் தான் அழகு.ஆனால் மஞ்சள் கறை,சொத்தை இருந்தால் பற்களின் அழகு கெட்டுவிடும்.வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இந்த பல் மஞ்சள் கறைகளை எளிதில் நீக்கிவிடலாம்.
தேவையான பொருட்கள்:-
1)கல் உப்பு
2)மஞ்சள் தூள்
3)எலுமிச்சை சாறு மற்றும் தோல்
4)தேங்காய் எண்ணெய்
செய்முறை:-
ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.எலுமிச்சை தோலை தூக்கி போடாதீர்கள்.அதையும் பல் மஞ்சள் கறை நீக்க பயன்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் 1/2 தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெய்,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி கல் உப்பை பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றில் கலந்து விடவும்.
நன்கு பேஸ்ட் போல் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு எடுத்து வைத்துள்ள எலுமிச்சை தோலில் இந்த’போஸ்ட்டை வைத்து பற்களின் மீது நன்கு அழுத்தி தேய்க்கவும்.
குறிப்பாக மஞ்சள் கறை உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும்.பிறகு வெந்நீர் கொண்டு வாயை நன்கு கொப்பளித்துக் கொள்ளவும்.பல் துலக்கிய பின்னர் இந்த கலவையை பற்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கி வெண்மையாகும்.