ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்!

0
133
#image_title

ஆர்கானிக் பேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவினால் முகம் தங்கம் போல் மின்னும்!

உங்கள் முகத்தில் உள்ள துளைகளில் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு, தூசு படிந்து முக அழகை கெடுக்கும் விதமாக இருக்கும். இதை அகற்ற வீட்டில் இன்ஸ்டன்ட் பேஸ் வாஷ் செய்து பயன்படுத்தி வாருங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)முல்தானி மெட்டி
2)அதிமதுரம்
3)கற்றாழை ஜெல்

பேஸ் வாஷ் செய்வது எப்படி?

முதலில் ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் அதிமதுரப் பொடி மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ப்ரஸ் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை முகத்திற்கு பயன்படுத்தி கழுவி வந்தால் முகத்தில் உள்ள டெட் செல்கள், அழுக்கு, தூசு நீங்கி முகம் அதிக பொலிவாக காட்சியளிக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தேங்காய் எண்ணெய்
2)கற்றாழை ஜெல்
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை முகத்திற்கு பயன்படுத்தி வாஷ் செய்தால் முகம் அதிக பொலிவாக இருக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)தயிர்
2)உளுந்து மாவு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உளுந்து மாவு, 1 1/2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இதை முகத்திற்கு பயன்படுத்தி வாஷ் செய்தால் முகம் அதிக பொலிவாக இருக்கும்.