உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் தர்பூசணி ஜூஸ்! இதனுடன் இந்த பொருளை சேர்த்தால் இரண்டு மடங்கு பலன்!

0
167
#image_title

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் தர்பூசணி ஜூஸ்! இதனுடன் இந்த பொருளை சேர்த்தால் இரண்டு மடங்கு பலன்!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் தர்பூசணி ஜூஸ் தயார் செய்து குடித்து வர வேண்டும். இந்த உடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி ஜூஸ் எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் பழ வகைகளில் தர்பூசணியும் ஒன்று. தர்பூசணி பழத்தில் நீர்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் தர்பூசணியில் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றக் கூடிய ஆற்றலும் இருக்கின்றது. இதனால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும் தர்பூசணி பழத்தை ஜூஸ் செய்து குடித்து வரலாம்.

உடல் எடையை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* தர்பூசணி
* இஞ்சி
* எலுமிச்சை சாறு
* உப்பு

தயார் செய்யும் முறை…

முதலில் தர்பூசணி பழத்தை தோல் நீக்கி பின்னர் விதைகளை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் சிறிய அளவு இஞ்சியை தோல் நீக்கி சிறிது சிறிதாக வெட்டி மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள தர்பூசணி பழத்தையும் அதில் போட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் தேவையான. அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த தர்பூசணி ஜூஸ் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறி உடல் எடை குறையத் தொடங்கும்.