நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்

0
149

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷியாவின் எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த பாதிப்பும் இருக்காது  என்று ரஷியாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்து உள்ளார். எஸ் -400 வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவது கால அட்டவணையில் இருக்கும். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எஸ் -400 விநியோகத்தை பாதிக்காது.

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ரஷிய ஆதரவு உட்பட சில மிகப் பெரிய அறிவிப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ரஷ்யா மிகவும் சாதகமான ஆதரவை வழங்கியுள்ளது, அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இன்று, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நிகழ்வுகளில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக தூதர் வெங்கடேஷ் வர்மா தெரிவித்தார்.

Previous articleஇந்தியாவின் நடவடிக்கை சீனாவுக்கு மிகுந்த  கவலை அளிக்கிறது
Next articleஉலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா