திரௌபதி அம்மன் கோவில் திறப்பில் நாங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி என்ற கிராமத்தில் உள்ள வன்னியர்கள் தங்களின் குலதெய்வமாக திரௌபதி அம்மனை காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது.அந்த திருவிழாவின் போது பட்டியலினத்தை சேர்ந்தவர் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் நிர்வாகிகள் பலர் கண்டனம் தெரிவித்தனர். அதாவது காலம் காலமாக பின்பற்றி வரும் விதிமுறைகளை தற்போது மட்டும் ஏன் மீற வேண்டும் என்று பல கேள்விகளையும் எழுப்பினர்.
அதுமட்டுமின்றி பட்டியலினத்தை சேர்ந்தவர்களும் தங்களை இவர்கள் தாக்கி விட்டனர் எனக் கூறி அமைச்சரிடம் முறையிட்டனர். ஆனால் அமைச்சர், இருதரப்பினர்கிடையும் சுமுகமாக பேசி சமாதானம் செய்யாமல் பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவதூறாக பேசினார்.அந்த வகையில் பட்டியலின மக்களுக்கு ஆதரவு தெரிவித்தது மேற்கொண்டு இந்த பிரச்சனையை பூதாகரமாக வெடிக்க ஊன்றுகோல் ஆகிவிட்டது.
உடனடியாக போராட்டக் கலவரம் வெடிக்காமல் இருக்க திரௌபதி அம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை சீல் வைத்தது.இதனை ரத்து செய்யும்படி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது, மற்ற கோவில்களில் எல்லாம் சீல் வைக்கப்பட்டால் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் மூன்று வேலையும் பூஜை நடப்பதற்காவது கோவில் திறக்கப்படும். ஆனால் இந்த கோவிலுக்கு அந்த அனுமதி கூட வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இதற்குரிய காரணம் கேட்டால் சட்ட விதிமுறைகள் என கூறி சப்பக்கட்டு கட்டி அரசு பதிலளிப்பது கண்டிக்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.மேற்கொண்டு இந்த வழக்கானது நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிபதிகள்,குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் நுழைந்ததை யொட்டி அவர்களை தாக்கியதாக தொடரப்பட்ட இந்த வழக்கானது தற்பொழுது அறநிலையத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வாறு விசாரணை நடந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அறநிலைத்துறை தான் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும். எனவே மனு அளித்தவர் அறநிலைத்துறையை தான் நாட வேண்டும். அதேபோல அறநிலைத்துறையும் இவர் கொடுக்கும் மனுவிற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.