இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் கோலாகலமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் 2008 ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த போட்டியில் அனைத்து நாட்டு வீரர்களும் ஒரே அணியில் சேர்ந்து விளையாடுவார்கள். இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளேமே உள்ளனர். ஆனால் இந்த முறை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்கவில்லை. குறிப்பாக இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இந்த வருடம் ஐ.பி.எல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னால் கேப்டனுமான சென்னை அணியின் கேப்டனுமான டோனியின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். டோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் பேசும்போது டோனியை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும் மேலும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்பார் என நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.