கேழ்வரகு சப்பாத்தி! முழு விவரங்கள் இதோ!

0
181

கேழ்வரகு சப்பாத்தி! முழு விவரங்கள் இதோ!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரத்தில் இட்லி தோசை பொங்கல் மற்றும் மதிய நேரத்தில் சாப்பாடு அதன் பிறகு இரவில் சப்பாத்தி போன்றவற்றை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஊட்டச்சத்து மிகுந்த கேழ்வரகு சப்பாத்தி எப்படி செய்வது என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு1 கப் கோதுமை மாவுகால் கப் தண்ணீர்1 கப் உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப

செய்முறை :ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.கொதிக்கும்போது எண்ணெய், கேழ்வரகு மாவு சேர்த்து கட்டியில்லாமல் ஐந்து நிமிடம் கிளறி இறக்கி விடலாம்.

பிறகு கோதுமை மாவை சேர்த்து பூரி மாவு போன்று பிசைந்து கொண்டு அவை, ஆறியவுடன் மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் சுட வேண்டும்.

மேலும் அடுப்பில் வைத்து கிளறாமல் சாதாரண சப்பாத்தி செய்யும் முறையிலும் எல்லாவற்றையும் சேர்த்து, பிசைந்து செய்யலாம்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் குருமா, சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.

 

Previous articleஇந்த பிரியாணியை மட்டும் சுவைத்தால் நீங்க விடவே மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட் செம!..
Next articleபாதாம் ஏன் சாப்பிட வேண்டும்! மருத்துவர்களின் விளக்கம்!