இந்த பிரியாணியை மட்டும் சுவைத்தால் நீங்க விடவே மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட் செம!..

0
81

இந்த பிரியாணியை மட்டும் சுவைத்தால் நீங்க விடவே மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட் செம!..

முதலில் தேவையான பொருட்களை நாம் எடுத்துக் கொள்வோம், தேவையான பொருள்கள், பாஸ்மதி அரிசி – 200 கிராம், கத்திரிக்காய் – 100 கிராம், வெங்காயம் – 75 கிராம், தக்காளி – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, தயிர் – 2 மேசைக்கரண்டி, இஞ்சி பூண்டு நறுக்கியது – ஒரு தேக்கரண்டி, கறித்தூள் – 2 தேக்கரண்டி, கெட்டியான தேங்காய்பால்/பசும்பால் – 50 மில்லி, கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி, சோம்பு – 1/2 தேக்கரண்டி, பட்டை, கிராம்பு – தலா இரண்டு, எண்ணெய் – 25 மில்லி, கறிவேப்பிலை – 2 கொத்து, உப்புத்தூள் – 1 1/2 தேக்கரண்டி, சுடுத் தண்ணீர் – 300 மில்லி

 

 

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம், செய்முறை, அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.மைக்ரோவேவில் வைக்கக்கூடிய பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கிராம்பு, கறுவா போட்டு ஓவனில் வைத்து ஒரு நிமிடம் சூடாக்கவும்.

பிறகு அதில் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 4 நிமிடங்கள் வேக விடவும்.வெங்காயம் வெந்ததும் அதனுடன் கத்திரிக்காய், இஞ்சி, பூண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி மூடி ஓவனில் வைத்து 3 நிமிடங்கள் வேக விடவும்.இப்பொழுது கத்திரிக்காய் அரை வேக்காடு வெந்திருக்கும் நிலையில் அதில் தக்காளி, தயிர் மற்றும் அரிசியை தண்ணீரில்லாமல் வடித்தெடுத்து போட்டு பாலையும் ஊற்றி கலந்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.

பின்பு அதில் கறித்தூள், கரம் மசாலா மற்றும் மீதமிருக்கும் உப்பையும் போட்டு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விடவும். 5 நிமிடங்களுக்கொரு முறை திறந்து கிளறி விட்டு பின் வேக விடவும்.இறுதியில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மீண்டும் மூடி மேலும் 3 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.சுவையான கத்தரிக்காய் பிரியாணி தயார். மைக்ரோவேவிலேயே ஒரு நிமிடத்தில் பொரித்த பப்படத்தோடு பரிமாறவும்.

author avatar
Parthipan K