மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு!! 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
206
West wind speed variation!! Rain warning for 13 districts has been announced by Meteorological Department!!
West wind speed variation!! Rain warning for 13 districts has been announced by Meteorological Department!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு!! 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் ஜூன் 18ஆம் தேதி தென்மேற்கு பருவமழை  தொடங்கியது. மேலும் தொடங்கிய நாள் முதல் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து  வருகிறது.

இந்நிலையில் தற்போது வானிலை மையம் அறிவிப்பின் படி தமிழகத்தில் ஜூன் 26 ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை மையம்  அறிவித்துள்ளது.

இதனையடுத்து  சென்னையில் 48 மணி நேரத்துக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும்  தெரிவித்துள்ளது. அதனையடுத்து அடுத்து 3  மணி நேரத்துக்கும் 13 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு  வாய்ப்பு என்று அறிவித்துள்ளது.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, திருப்பத்தூர் , நீலகிரி,வேலூர் , கோவை, திருப்பூர்,  தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில்இன்று  மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை சென்னை வானிலை மையம் தற்போது அறிவித்துள்ளது.

இந்த வானிலை மையம் அறிவித்த இந்த தகவல் தமிழக விவசாயிகளுக்கு  இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Previous articleவேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!!
Next articleரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! யாரும் அறியாத தகவல்!!