இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

0
148

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்திய கூட்டணியில் பெற்றுள்ளன. தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக பாஜக உடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில், “இந்தியா” கூட்டணி, ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமாக மு.க ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.  அப்போது பேசிய அவர், இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துத் தலைவர்களுக்கும் வணக்கம் என்றார்.

எங்கே சென்றாலும் – எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் – எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த ‘பப்ளிக் ரிலேஷன் ஆபீஸராக’ ‘பிரைம் மினிஸ்டர்’ அவர்களே செயல்பட்டு வருகிறார்.  இந்தியா கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

9 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சொல்வதற்கு சாதனைகளே இல்லாத ஆட்சி ஒன்றிய பா.ஜ.க ஆட்சிதான் என்றும் சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைதி காக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவைப் பாதுகாக்கிற மகத்தான அரசியல் களத்தில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள எதிர்க்கட்சிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளன என்றும் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் – இந்தியாவைக் காக்கிற போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டு ஊடகங்களின் ஆதரவையும் கேட்டு விடைபெறுகிறேன் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி தான் பெரும்வாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.

Previous articleகிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!!! இலங்கையில் இன்று நடைபெறுகிறது!!!
Next articleபிரபல இயக்குநரின் தங்கை மகன் ஹீரோவாக அறிமுகம்!!