கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!!! இலங்கையில் இன்று நடைபெறுகிறது!!!

0
35

கிரிக்கெட் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி!!! இலங்கையில் இன்று நடைபெறுகிறது!!!

உலகத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படும் இந்தியா,  பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசியாகப் கிரிக்கெட் போட்டி இன்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்தியா நாட்டுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் இருக்கும் ஒரு சில காரணங்களால் தற்பொழுது வரை இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடர்களை தவிர்த்து வருகின்றது. இந்த பிரச்சனை எப்பொழுது முடியும் என்று தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மற்ற நாடுகளுக்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி வந்தாலும் பாகிஸ் தான் இந்தியாவுக்கு வருவதோ அல்லது இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வதோ கிடையாது. இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகளும் சர்வதேச அளவில் நடக்கும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றது.

அந்த வகையில் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இந்தி கிரிக்கெட் அணிக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியும் கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரு முறையாவது எதிர்த்து விளையாடுவது போலவே அட்டவணையை வடிவமைக்கும்.

அவ்வாறு வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை நடைபெறும் அதிக எதிர்பார்ப்பு மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கப் தொடரின் கிரிக்கெட் போட்டி இன்று(செப்டம்பர்2) மதியம் 3 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லகெலெ கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்திய அணியின் டாப் ஆர்டரை வீழ்த்த பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி சிறப்பாக செயல்படுவார். அதே போல சுழல் பந்து வீச்சில் சதாப் கான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே போல பேட்டிங்கிள் பாபர் அசம் சிறப்பான பார்மில் இருக்கிறார். முகமது ரிஷ்வான் அதே போல பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என எதற்கும் குறைவு இல்லை.

அதே சமயம் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து வந்து அயர்லாந்து தொடருக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். எனவே ஜஸ்பிரித் பும்ரா பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இந்திய அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, சுப்மான் கில் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காயத்தில் இருந்து குணமடைந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அவர்கள் பிளேயிங் 11ல் இருப்பாரா என்பது குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சுழற்பந்துவீச்சு பொறுத்தவரை ரவீந்தர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் இந்திய அணியும் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என்ற் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றது.