என்ன சொல்றீங்க இனி 500 ரூபாய் நோட்டு செல்லாதா..? பகிர் கிளப்பும் செய்தி!!

0
93
#image_title

என்ன சொல்றீங்க இனி 500 ரூபாய் நோட்டு செல்லாதா..? பகிர் கிளப்பும் செய்தி!!

இந்தியாவில் தற்பொழுது ரூபாய் நோட்டுகள் தொடர்பான பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை ரிசர்வ் பேங்க் நிறுத்தியது. மத்திய அரசு இந்த 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்திய பொழுது அதன் புழக்கம் அதிகளவில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் 2000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்ததால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

ஆனால் தற்பொழுது 500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற புதுவித தகவல் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. 500 ரூபாய் தாளில் நட்சத்திரக் குறியீடு (*) கொண்ட நோட்டுகள் செல்லாது என்ற செய்தி வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பத்திலும், அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அளித்த விளக்கம்:

தவறாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்களுக்கு பதில் நட்சத்திரக் குறியீடு அச்சிடப்பட்டு இருக்கும். இந்த வகை நோட்டுகள் மற்ற 500 ரூபாய் நோட்டுகளை போலவே செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் 500 ரூபாய் நோட்டு குறித்து பரவும் இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்து இருக்கிறது.