கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!!

0
58
#image_title

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் தற்பொழுது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக அடுத்த 5 மணி நேரத்தில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, செங்கல்பட்டு, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, திண்டுக்கல், தூத்துக்குடி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை, வேலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், பெரம்பலூர்.கடலூர், தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.