அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

0
71
aiadmk-is-the-alliance-with-this-party-the-secret-of-the-published-general-committee-meeting-stalin-in-shock
aiadmk-is-the-alliance-with-this-party-the-secret-of-the-published-general-committee-meeting-stalin-in-shock

அதிமுக + “—-” இந்த கட்சி உடன் தான் கூட்டணியா.. வெளியான பொதுக்குழு கூட்டத்தின் சீக்ரெட்!! அதிர்ச்சியில் ஸ்டாலின்!!

அதிமுகவில் அம்மாவின் மறைவிற்கு பிறகு யார் ஒற்றை தலைமையை ஏற்கப் போகிறார்கள் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து  மேல்முறையீடு வழக்கு தொடுத்தும் எடப்பாடி அவர்களே வெற்றியடைந்தார்.

இதனிடையே பாஜக, மறைந்த முதல்வர் அம்மா அவர்களை பற்றி அவதூறாக பேசியதை அடுத்து அதிமுகவிற்கு இடையே விரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது. அதுமட்டுமின்றி வரும் தேர்தலில் தன்னிச்சையாக நிற்க போகிறோம் என்றஅறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டது.

தற்பொழுது வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பல கட்சிகள் அதற்கான ஆயத்த பணியை தொடங்க ஆரம்பித்து விட்டனர். திமுக இந்த தேர்தலில் முன்வந்து விடலாம் என போட்ட திட்டங்கள் அனைத்தும் வீணாகிவிட்டது. தற்பொழுது ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

4000 கோடி செலவில் மழை நீர் வடிகால் பணி செய்யப்பட்ட பொழுதும் மக்கள் ஏன் வெள்ளத்தில் தத்தளித்தனர் என்று பலரிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளது. அது மட்டுமின்றி பல கட்சிகளும் இதுதான் நமக்கான சந்தர்ப்பம் என்பதை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பல திட்டங்களை தீட்டி வருகின்றனர்.அந்த வகையில் அதிமுகவும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் இந்த சந்தர்ப்பத்தை தனக்கான சூழ்நிலையாக பயன்படுத்தி அடுத்து யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளது.

அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று பொதுக்குழு கூட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இம்மாதம் 26 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து எல்லாம் ஆலோசிக்கப்படும் என்று தெரிய வருகிறது.

பாமகவும் நாங்கள் தன்னிச்சையாக செயல்படுவோம் என்று கூறிய நிலையில் தற்போது மீண்டும் அதிமுகவுடன் இணைந்து இந்த தேர்தல் களத்தை சந்திக்கலாம் என பலர் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இந்துத்துவத்தை மூச்சாக கொண்டிருக்கும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியாதல் தற்பொழுது சிறுபான்மை மக்களின் வாக்குகள் எளிதாக கிடைத்துவிடும்.

அதன் முதல் படியாக எடப்பாடி அவர்கள் தற்பொழுது நடைபெற்ற எழுச்சி மாநாட்டில் 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.அதுமட்டுமின்றி அவ்வபோது சிறுபான்மை மக்கள் அதிமுக கட்சியின் மேல் வைத்துள்ள நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.

மேலும் திமுக மீது இந்த விடுதலை குறித்த நவடிக்கையில் இஸ்லாமியர்கள் அதிருப்தி நிலவி இருக்கும் சூழலில் அதிமுக-விற்கு அனைத்து பக்கமும் சாதகமாவே அமைத்துள்ளது.அந்தவகையில் திமுக வுடன் கூட்டணியில் இருக்கும் சிறுபான்மை கட்சிகள் தற்பொழுது அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை.அதற்கு மாறாக மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.