பென் ஸ்டோக்ஸின் தந்தைக்கு நேர்ந்தது என்ன?

Photo of author

By Parthipan K

ஐ.பி.எல் தொடர் இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடருக்கு உலக அளவில் மிகப்பெரிய  ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக எட்டு அணி வீரர்களும் துபாய் சென்று விட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தனது தந்தையை கவனிக்க வசதியாக கடந்த மாதத்தில் நியூசிலாந்துக்கு சென்றார்.

நியூசிலாந்துக்கு செல்லும் வெளிநாட்டினர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று விதிமுறை இருப்பதால் பென் ஸ்டோக்ஸ் தற்போது தான் அவரது தந்தையை சந்தித்துள்ளார். இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. எனவே அவர் ஐ.பி.எல். போட்டியில் முதல் பாதி ஆட்டங்களை தவறவிடலாம் என்று கூறப்படுகிறது. இது ராஜஸ்தான் அணிக்கு இது பலவீனமகா இருக்கலாம்.