சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்னவாகும்?.. நீங்கள் இந்த தவறை செய்பாவரா?..

0
172

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் என்னவாகும்?.. நீங்கள் இந்த தவறை செய்பாவரா?..

நம் உடலிலுள்ள அனைத்து உறுப்பு இயக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமாதாகும் உடலிலுள்ள எல்லா உறுப்புகளின் இயக்கத்துக்கும் தண்ணீர் தான் அடிப்படை தேவை. இந்த தண்ணீர் தான் நம்முடைய உணவு செரிப்பது முதல் வெளியேற்றுவது வரை அனைத்துக்கும் உதவுகிறது. அதனால் தான் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அது நிறைய ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 

நம்முடைய அனைத்து உறுப்புகள் கண் முதல் பாதம் வரை அவைகள் செயல் பட தண்ணீர் தன் மிக மிக அவசியம்.மேலும் நம் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் கல்லீரலும் சிறுநீரகமும் வெளியேற்றி விடும்.சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் சில சிக்கல்கள் உண்டாகக் கூடும். குறிப்பாக,நீர், ஜூஸ் போன்றவற்றை சாப்பிடும்போது எடுத்துக் கொள்வதால் செரிமான சுழற்சியின் போது சுரக்கும் சில சுரப்பிகள் சுரக்காமல் போகலாம். அது செரிமானத்தை கடினமாக்கும்.

நாம் உட்கொள்ளும் உணவின்போது தண்ணீர் அதிக அளவு குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் இரண்டையுமே ஒன்று போல பாவித்து உணவை மென்று சாப்பிடும் பழக்கம் இல்லாமல் ஆகிவிடுகிறார்கள். உணவை வேகமாக விழுங்குவார்கள். அது செரிமானத்தை மேலும் மோசமாக்கும்.

 

நம்முடைய உடலின் ஜீரண ஆற்றலை முறைப்படுத்தவும் மேம்படுத்தவும் உமிழ்நீர் மிக முக்கியம்.இதுதான் நம்முடைய உணவின் கடின மூலக்கூறுகளை உடைத்து, உணவுத் துகள்களை மென்மையாக்கி, ஜீரணத்தை அதிகமாக்குகிறது. ஆனால் நாம் உணவு உட்கொள்ளும்போது இடையில் தண்ணீர் குடிப்பதன் மூலம் உமழ்நீர் சுரப்பு குறைந்து ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது

Previous articleபிரண்டை வற்றல்! முழு விவரங்கள் இதோ!
Next articleஎதைப் பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன்!.. ஆனால் இதை மட்டும் நான் சொல்ல மாட்டேன்!. ரஜினி கூறிய பதில்?..