இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?..

0
202
What is so special about this temple? Will the free government bus be operated?..
What is so special about this temple? Will the free government bus be operated?..

இந்த கோவிலில் அப்படி என்ன சிறப்பு இருக்கு? இலவச அரசு பேருந்து இயக்கப்படுமா?..

நெல்லை மாவட்டத்திலுள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது.அங்கு ஆடி மாதம் ஆண்டு தோறும்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.இந்நிலையில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் நடைபெறுகிறது.

திருவிழாவில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்காசி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த திருவிழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவிழாவையொட்டி காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு போகும் பக்தர்கள் அனைவருக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தனியார் வாகனங்களில் சென்றால் காரையாறுக்கு செல்ல அனுமதி கிடையாது.

தனியார் வாகனங்களை அம்பை அகஸ்தியர்பட்டியில் நிறுத்தி விட்டு அங்கிருந்து அரசு பேருந்துகளில் செல்லலாம். பிளாஸ்டிக் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் அங்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா காலத்திற்கு பின்னர் அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீசார் மற்றும் வனத்துறையினர் பள்ளி- கல்லூரி நாட்டு சமூக நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு வருகிற 30ஆம் தேதி வரை செல்ல தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி பாபநாசம் அகஸ்தியர் அருவி,மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை குதிரைவெட்டியில் உள்ள ஓய்வு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த இடங்கள் எல்லாம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.சில பக்தர்கள் மட்டும் வருகை தந்து செல்கிறார்கள்.

Previous articleஇந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!ட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!
Next articleநடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதை மீறினால் நடவடிக்கை!