பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்?

0
96

பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்கள்! ஆகவே விருப்பு வெறுப்புகளும் ஆளாளுக்கு மாறும் தன்மை உடையதே ஆகும்!

 

எனினும், பொதுவாக காணப்படும் பெண்களின் எதிர்பார்ப்பு என்பது, “தம்மை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், தமது கவுரவத்தை காப்பாற்றி, தாம் சொல்ல வருவதைக் காது கொடுத்துப் பொறுமையுடன் கேட்கும் வாஞ்சையுள்ள குணத்தைத் தான்”!

 

ஒரு பெண் தனது அன்புக்குரியவனை அல்லது கணவனை முழுவதும் நம்பிவிடுபவள்! அவன் மீது அளவற்ற அன்பும், கவனமும் கொண்டவள்!

 

அதே அன்பையும், கவனத்தையும் (Care & Affection) ஒரு குழந்தை போலவே அவள் எதிர்பார்க்கிறாள்!

 

ஆனால், பெரும்பான்மை ஆண்கள் பொதுவாகவே தமது உடலியல் தேவைகளைத் தாண்டி பெண்மையை சக உயிராக, சக தோழியாக, சக துணையாகக் கருதி அன்பு காட்டுவது குறைவு!

 

ஆண்களின் அன்பு காட்டல் பெரும் விழுக்காடு பாலியல் தேவையை ஒட்டியது! பெண்களின் அன்புக்கு பாலியல் ஒரு பொருட்டல்ல; அதுவும் ஒரு வழி, உபாயம் அவ்வளவே!

 

அன்புள்ள ஒருவன்

பெண்களை மதிக்க தெரிந்த ஒருவனை

தான் செய்யும் சிறு தவறை பெரிது படுத்தாமல் பக்குவமாய் எடுத்து சொல்லும் ஒருவனை

ஒளிவு மறைவு இல்லாமல், வெளிப்படையா இருக்கும் ஒருவனை.

பெற்றோர்களை மதிக்க தெரிந்த ஒருவனை, அதாவது பெண் வீட்டு பெற்றோர்களை தன் பெற்றோர் போல பாகுபாடு இன்றி சமமாக நடத்துவது

ஏதேனும் சண்டை வந்தால் பொறுமையாக சரிக்கு சமமாக சண்டை போடாதாவனை

பெண்களை தொழில் செய்ய ஊக்குவிப்பவனை

ஒரு சமைக்க தெரிந்தவன்

தன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ஆணை எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.

 

பெண்களின் சுயம் தெரிந்து மதிக்கும், அவர்களின் உணர்வுகள் புரிந்து நடக்கும், அவர்களின் வலிகளுக்கு மருந்தாக மாறும் புரிதல் கொண்ட எந்த ஒரு ஆண்மகனையும், எப்பெண்ணுக்கும் பிடிக்கும்.

 

தங்களுக்கு பாதுகாப்பு இவரிடம் உண்டு என்று அவர்கள் நம்பினார் என்றால் அவர்களை நோக்கி அவர் நாட்டம் கொண்டவராகிவிடுவார்.

 

பெண்களை மதிப்பது,விட்டுக் கொடுத்து வாழ்வது,நியாயவாதியாக இருப்பது, மனைவியின் குடும்பத்தை தன் குடும்பமாக எண்ணுவது,பரோபகாரியாக இருப்பது போன்ற நற்குணங்கள் பெண்களைக் கவரும்.