பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!!

Photo of author

By CineDesk

பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!!

CineDesk

What the son did to the mother for money!! Sensational incident!!

பணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!!

தினமும் ஏராளமான வியக்கத்தக்க செய்திகளை பார்த்து வருகிறோம்.அந்த வகையில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹரியான மாநிலத்தில் உள்ள பலவர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் தான் அசரி என்ற பெண்மணி. இவருக்கு முஸ்தகீம் என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில், முஸ்தகீம் கடந்த 23 ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று தனது தாய் அசரி யிடம், ஒரு லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அசரி தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறி இருக்கிறார். இதனால் முஸ்தகீம் கோபமடைந்து தனது தாயிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கேட்டுள்ளார்.

பயமடைந்த அசரி கத்தி கூச்சலிட்டு அருகே இருப்பவர்களை அழைத்துள்ளார். இவரின் கூச்சல் ஒலி கேட்டு பக்கத்தில் இருப்பாவர்கள் அனைவரும் அசரி வீட்டை சூழ்ந்தனர்.

பிறகு பொதுமக்கள் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் முஸ்தகீம் இடம் இருந்த துப்பாக்கியை வாங்கி கொண்டு அவரை கைது செய்தனர்.

பெற்ற தாயையே துப்பாக்கி கொண்டு மிரட்டி பணம் கேட்ட இந்த மகனின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிள்ளைகள் வளர வளர அவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் அனைவரும் கண்காணிக்க வேண்டும்.

இல்லையென்றால் இதுபோல தான் அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறி பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விடுவார்கள். எனவே, பெற்றோர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.