ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

0
206
Opening of reservation counters at railway stations!! Indian Railway Action Announcement!!
Opening of reservation counters at railway stations!! Indian Railway Action Announcement!!

ரயில் நிலையங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறப்பு!! இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு!!

ரயிலில் முன்பதிவு செய்வதற்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தக் கூடிய ஒரு இணையதளம் தான் ஐஆர்சிடிசி.

இந்த இனையதளத்தில் அடுத்த நாள் பயணம் செய்வதற்கு ஏசி வகுப்பிற்கான முன்பதிவு பத்து மணி என்ற அளவில் துவங்கும். ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பதினொரு மணிக்கு துவங்கும்.

இதில் முன்பதிவு செய்வதற்கு சிறிது நேரம் தாமதித்தால் கூட அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துவிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில், தற்போது ஐஆர்சிடிசி இணையதலமானது நாடு முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இவ்வாறு திடீரென்று இணையம் முடங்கியதால் நீண்ட தூரம் செல்வதற்கு முன்பதிவு செய்யும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மீண்டும் எப்பொழுது இது நடைமுறைக்கு வரும் என்று தெரியாததால் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இதற்கான விளக்கத்தை ஐஆர்சிடிசி கூறி உள்ளது. அதாவது இணையதளம் மற்றும் செயலியின் மூலமாக பண பரிமாற்றம் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கி உள்ளது.

இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, டிக்கெட்களை முன்பதிவு செய்ய Ask disha என்ற செயலியை பயன்படுத்த ஐஆர்சிடிசி கூறி உள்ளது.

மேலும், ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதன் காரணமாக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட்களுக்கான முன்பதிவு கவுண்டரை இந்திய ரயில்வே துறை கொண்டு வந்துள்ளது.

இதன் மூலமாக முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Previous articleபணத்திற்காக தாயிடம் மகன் செய்த செயல்!! பரபரப்பு சம்பவம்!!
Next articleதளபதி 68  படப்பிடிப்பிற்கு முன் ஓய்வு எடுக்க வெளிநாடு சென்ற நடிகர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!