டெத் வேலி என்ற தேசியப் பூங்கா கலிஃபோர்னியாவில் உள்ளது அங்கு வெப்பநிலை 54.4 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இதுதான் உலகிலேயே அதிகமான வெப்பநிலை என்று அமெரிக்க தேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது. அதன் மேற்குக் கரையில் அனல் காற்று வீசிக்கொண்டிருக்கும் நேரத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள மின் ஆலை ஒன்று அதிக வெப்பத்தினால் செயல் இழந்தது. இதற்கு முன் 54 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்ததும் இதே டெத் வேலியில்தான். தற்போதைய அனற்காற்று அரிசோனா மாநிலத்திலிருந்து வாஷிங்டன் மாநிலம் வரை பரவியுள்ளது. இன்னும் 10 நாள்களுக்கு அதிக வெப்பம் தொடரும் என்று கருதப்படுகிறது.