எந்த கிழமை எந்த தானம் செய்வது உகந்தது!
ஒருவருக்கு தானம் கொடுக்கும் பழக்கம் இருந்தால் அவர்கள் வாழ்வில் கஷ்டங்கள் அனைத்தும் கற்பூர தீபம் போல் கரைந்து விடும் என்று சொல்வார்கள்.
தானம் கொடுப்பது அவ்வளவு சிறப்பான காரியம் ஆகும். தானம் செய்தால் நம் தலைமுறைக்கும் புண்ணியம் வந்து சேரும். அதுமட்டும் இன்றி தானம் செய்வதால் ஒருவித மன நிம்மதி, திருப்த்தி கிடைக்கும்.
இவ்வாறு தானங்கள் குறித்து சொல்லிக்கொண்டே செல்லலாம். தானத்தில் பல வகைகள் இருக்கின்றது. இந்த தானங்களை எந்த கிழமையில் செய்தால் நமக்கு இன்னும் பலன் வந்து சேரும் என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.
ஞாயிறு, திங்கள் என்று 7 நாட்களில் என்ன தானம் செய்ய வேண்டும்?
1)ஞாயிற்றுக் கிழமை
வாரத்தின் முதல் நாளான ஞாயிற்று கிழமையில் தங்களால் முடிந்த அளவு வெல்லம் வாங்கி தானம் செய்யலாம்.
2)திங்கள் கிழமை
இந்த கிழமையில் முருகன் கோயிலுக்கு நெய் வாங்கி தானம் செய்யலாம். இதனால் கடவுளின் அருள் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.
3)செவ்வாய் கிழமை
மரக் கன்று நடுவது மிகவும் நல்ல செயல். இந்த மரக் கன்றை இந்த நாளில் பிறருக்கு இலவசமாக வழங்கலாம்.
4)புதன் கிழமை
மங்கலகரமான புதன் கிழமையில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்யலாம்.
5)வியாழக் கிழமை
இந்த கிழமையில் வஸ்திரத்தை தானம் செய்யலாம்.
6)வெள்ளிக்கிழமை
புனித நாளான வெள்ளியில் அன்னத்தை தானம் செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
7)சனிக்கிழமை
இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று எண்ணெய் தானம் செய்வது நல்லது.