யார் இந்த இலோன் மஸ்க்?

Photo of author

By Parthipan K

இலோன் மஸ்க் என்பவர் தென்னாப்பிரிக்கா நாட்டை சார்ந்தவர் ஆவார். அவரது வாழ்கைகயில் பல சோதனைகளை கடந்து உலக அளவில் பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளதாக Bloomberg Billionaires Index தெரிவித்துள்ளது. அவரின் வெற்றிப் பயணத்தில் பெரிய தடையாக 12 வருடத்திற்கு முன்பு வந்த நிதி நெருக்கடிதான்.  செலவுக்கே, வங்கிகளிடம் தனிநபர் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் இருந்தும் தனது கடின முயற்சியை ஒருபோதும் கைவிடாத அவர் தற்போது Tesla நிறுவனத்தின் மூலம் 10 பணக்காரர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினர். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு, சுமார் 96 பில்லியன் வெள்ளி (70 பில்லியன் டாலர்).