13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!

Photo of author

By Amutha

13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!

Amutha

13 வருடங்கள் கழித்து இந்த பிரபல நடிகையை அஜித் சந்தித்தது ஏன்?? வெளிவந்த காரணம்!!

தமிழில் பிரபல நடிகராக விளங்குபவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி மாஸ் காட்டியது. இவருக்கு இதில் ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்றது. மேலும் துணிவு படப்பிடிப்பில் நடிகர் அஜித் மஞ்சு வாரியரிடம் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். அதில் 13 வருடங்களுக்கு முன்பு அசல் படத்தில் ஜோடியாக நடித்த பாவனாவிடம் பேச வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் சில காரணங்களால் பாவனாவை தொடர்பு கொள்ள இயலவில்லை. இருப்பினும் இதை அறிந்த பாவனா சில நாட்கள் கழித்து சென்னை வந்துள்ளார். அப்போது அவர் துணிவு படப்பிடிப்பிற்கு சென்று அஜித் மற்றும் மஞ்சுவாரியரை சந்தித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் மதிய உணவை ஒன்றாக சாப்பிட்டுள்ளனர். இதனை பாவனா அஜித் பிறந்தநாளன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் ஒரு பேட்டியில் பேசிய பாவனா கூறுகையில்,

அஜித்துடன் எப்பவோ நடித்த நடிகை நான். ஆனால் அவர் இன்னும் என்னை ஞாபகம் வைத்து நலம் விசாரித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித்தின் இந்த பண்பால் தான் அவரை எல்லாரும் கொண்டாடுகின்றனர் என்று பாவனா கூறினார்.