உதயநிதியை வைத்து திட்டங்களை தொடங்குவது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் சரமாரி கேள்வி!
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற்ற போது கூட்டத்தில் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது ஒப்புக்கொள்ள முடியாது என்று ஓபிஎஸ் போட்ட வழக்கானது இறுதியில் இபிஎஸ் பக்கம் தான் வென்றது. இந்நிலையில் இடைக்கால பொதுச் செயலாளராக நாளை எடப்பாடி அவர்கள் தலைமை செயலகம் செல்ல உள்ளார். இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியது, திமுக ஒரு கார்ப்பரேட் கட்சியாக தான் செயல்படுகிறது. இத்தனை அமைச்சர்கள் இருக்கையில் எந்த விழா தொடங்கி நாளும் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் தான் துவக்கி வைக்க இருக்கிறார். அமைச்சர்கள் இருக்கையில் எம்எல்ஏவான இவர் ஏன் இதனை செய்ய வேண்டும்? அதேபோல முதலில் முன்னுரிமை கொடுப்பவர்களை விட்டுவிட்டு இவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன்னுரிமை அளித்து வருகின்றனர். அந்த வகையில் துணை மேயர் இரண்டாவது வரிசையிலும் ,மேயர் மூன்றாவது வரிசையிலும் உட்கார வைத்து மரியாதை செலுத்துகின்றனர். இதுதான் திமுக கூறும் திராவிட மாடல். இதை பார்க்கையில் திராவிட மாடல் போல தெரியவில்லை நாங்கள் கார்ப்பரேட் கட்சி என்று உறுதி கூறுவது போல உள்ளது. இவ்வாறு எடப்பாடி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.