கொரோனா பரவல் மீண்டும் கட்டுப்பாடுகள் போடப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை!
சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதல் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 2000 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திருமணங்களில் 100 நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் மீறினால் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. அதனையடுத்து முதல்வர் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை முடிவில் சில கட்டுப்பாடுகள் போட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.