அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

0
275
#image_title
அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?
அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, ஆளும் கட்சியாக ஒருபுறம், எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக எதிர்க்கட்சியாக மற்றொருபுறம் மோதலில் இருந்தாலும்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் திமுக நிர்வாகிகளையும், திமுக கட்சித் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டி விருகிறார்.
நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கூட்டணியா? இல்லை  தனித்தும் இருக்கிறதா என்ற குழப்ப நிலையில் இருக்கிறது் இந்நிலையில் தமிழக அரசியலில்  மாற்றத்திற்கு மாற்று கட்சி ஒன்று தேவை என்ற குரல் எழுந்துள்ளது.
கடந்த காலங்களில் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவார் தேர்தலில் போட்டியிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது கூட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு பலரும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மக்கள் இயக்கத்திற்கு புஸ்ஸி ஆனந்த் தலைமை வகிக்கிறார். அவர் தலைமையில் இயக்கம் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.மற்ற அரசியல் கட்சிகள் உள்ளது போலவே மக்கள் விஜய் மக்கள் இயக்கத்திலும் தொண்டரணி இளைஞர் அணி மாணவர் அணி, விவசாய அணி, தொழிலாளர் அணி எனப் பல்வேறு அணிகள் உள்ளன.
திரைப்படங்கள் வாயிலாக தன் அரசியல் நிலைப்பாட்டை அவ்வப்போது தெரிவிக்கும் நடிகர் விஜய் அவர்கள் விரைவில், அடுத்த வருடம் வரும் நாடாளுமன்ற தேர்தலிலோ அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலோ விஜய் மக்கள் இயக்கத்துடன், நடிகர் விஜய் களம் காணுவார் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Previous articleரம்ஜான் பண்டிகையை ஒட்டி கோடியை அள்ளும் ஆட்டு வியாபாரம்!
Next articleகோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படி எனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்!