கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படி எனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்!

0
213
#image_title
கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படியெனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்! 
தமிழக முழுவதும் இந்த கோடைகாலத்தில் அதிக வெட்பநிலை காணப்படுகிறது. சென்னையில் 100 பெராஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது.
 வீட்டிலும், அலுவலத்திலும் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
சுட்டெரிக்கும் வெயிலில் நாம் வெளியே எங்கேயும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை நாம் பார்க்கலாம்.
இந்த கோடைக் காலத்தில் நாம் அடிக்கடி முகத்தை கழுவுவது மிகவும் நல்லது. அத்துடன்  கண்களையும் தண்ணீரில் கழுவி கொள்வது மிகவும் நன்று. நீர் ஆகாரங்களை அதிக அளவில் பருகுவது கோடைகாலத்தில் மிகவும் முக்கியம். இளநீர், மோர் சர்பத் போன்ற குளிர்ச்சியான நீர் ஆகாரங்களை பருக வேண்டும்.  ஆரஞ்சு பழம் ஜூஸ், கிர்ணிப்பழம் ஜூஸ் எனப் ஜூஸ் வகைகளை சாப்பிடலாம்.
அதே சமயத்தில் கெமிக்கல், எசன்ஸ் கலந்த ஜூஸ் வகைகளையும்; குளிர்பானங்களையும் தவிர்ப்பது நல்லது. முடிந்தால் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உச்சி வெயிலின் போதும், இரவு நேரங்களில் போதும் செரிமானத்திற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
author avatar
Savitha