தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

Photo of author

By Vinoth

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

Vinoth

தாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சம்மந்தப்பட்ட ஜெயஸ்ரீக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததில் இருந்து ஜெயஸ்ரீயின் உடல்நலம் குன்றி காணப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியபோது அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுத்துள்ளனர் மருத்துவர்கள். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஜெயஸ்ரீ தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் குடும்பத்தினர் நீண்டநேரமாக அவரை அழைத்தும் அவர் வராததால் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அவர் இறந்தநிலையில் காணப்பட்டுள்ளார். தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவமானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதே ஆகும் ஜெய்ஸ்ரீயின் மரணம் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மீளாத்துயரை அளித்துள்ளது.