ஆவின் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.43,000/- ஊதியம்.. நேர்காணல் மட்டும்!!

0
219
#image_title

ஆவின் நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.43,000/- ஊதியம்.. நேர்காணல் மட்டும்!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி Veterinary Consultant பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 10 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ஆவின்

பதவி: Veterinary Consultant

பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். நான்கு சக்கர அல்லது இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பு நபரின் அதிகப்பட்ச வயது 50 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

சம்பள விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: நேரடி முறை

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெற இருக்கும் தேதி: 10-01-2024