பாம்பு பழி வாங்கும் என்று சொல்வது உண்மையா?

0
207
#image_title

பாம்பு பழி வாங்கும் என்று சொல்வது உண்மையா?

பாம்பை அடித்தால் பழி வாங்கும் என்று பல தமிழ் படங்களில் பார்த்து இருப்போம். இதனால் பலரும் பாம்பை அடிக்க பயப்படுகின்றனர். உண்மையாகவே பாம்பை அடித்துக் கொன்றால் பாம்பு பழிவாங்க நம்மை தேடி வருமா? பாம்பை அடித்துக் கொன்றால் திரும்பவும் அதே வீட்டிற்கு வருவது அறிவியல் ரீதியாக உண்மை தான்.

ஆனால் அது நம் வீட்டிற்கு வருவது பழிவாங்க அல்ல. பாம்பை அடிக்கும் பொழுது அதன் கழிவுப் பாதையில் இருந்து ஒரு விதமான திரவம் வெளியேறும். இந்த கழிவின் நாற்றம் மற்ற பாம்புகளை கவரும். பெரும்பாலும் பாம்பு பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும் என்பதினால் நாம் அடித்து கொன்ற பாம்பு தான் பழிவாங்க வீட்டிற்கு வந்து விட்டதா என்று நாமும் அஞ்சுகிறோம்.

காற்றின் மூலம் பரவும் வாசத்தை வைத்து மட்டுமே எதிரிகளையும், இரையையும் அடையாளம் காணும்.

வீட்டில் சிறியா நங்கை, பெரியா நங்கை, ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் பாம்பு நடமாட்டம் வீட்டில் இருக்காது.

ஆனால் பாம்பு வராமல் இருக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் ஒருவரது வீட்டில் பாம்பு வருகிறது என்றால் ஆன்மீக ரீதியில் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை மறந்திருப்பீர் என்று அர்த்தம். குலதெய்வ வழிபாட்டை நினைவு படுத்த தான் பாம்பு வீட்டிற்கு வருகிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.