சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம்! வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

0
209
#image_title

சிறுவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாம்! வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வருகின்ற டிசம்பர் 28ம் தேதி தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்பொழுது மெல்ல மெல்ல தென் மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகின்றது.

இதையடுத்து வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் உள்ள 15 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு டிசம்பர் 28ம் தேதி தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி பாடுவதற்கு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த தடுப்பூசி முகாம் குறித்து பொது சுகாதார துறை அதிகாரிகள் “கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் தற்பொழுது வரை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மருத்துவ முகாம்களின் தொடர்ச்சியாக தென். மாவட்டங்களில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் டிசம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.

மொத்தமாக தென் மாவட்டங்களில் 8 லட்சம் குழந்தைகள் வசிக்கின்றனர். இதில் மழை பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இந்த முகாமிற்காக மத்திய அரசு 10 லட்சம் தவணை தட்டம்மை தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதை குழந்தைகளுக்கு செலுத்தவுள்ளோம்” என்று கூறினர்.