மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் பணி!! பொதுப்பணித்துறை வெளியிட்ட தகவல்!!
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையையொட்டி கடலுக்கு நடுவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருப்பதாக தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து, இதற்காக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டபோது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறி உள்ளது.
அந்த வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு விண்ணப்பம் அனுப்பி இருந்தது. இந்த விண்ணப்பத்தில் பேனா நினைவுச் சின்னம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையும், பொதுமக்கள் கருத்து கேட்பு முடிவுகள் முதலிய பல விவரங்கள் சேர்த்து சமர்ப்பிக்கப்பட்டது.
இதைப்பற்றி பரிசீலனை செய்த மத்திய அரசு சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு இதற்கு 15 நிபந்தனைகளை கூறி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதியை வழங்கி உள்ளது.
மத்திய அரசு சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு கொடுத்துள்ள அதே 15 நிபந்தனைகளுடன் கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி கொடுத்து தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு அனைத்து அனுமதிகளும் கிடைக்கப்பட்ட நிலையில் விரைவில் இதற்கான வேலை தொடங்கும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
இதற்கு விரைவாக ஒப்பந்த புள்ளிகள் அறிவிக்கப்பட்டு, மூன்று மாதத்திற்குள் இதற்கான பணிகள் தொடங்க இருக்கிறது. அடுத்த ஒன்றரை ஆண்டில் இதற்கான பணிகள் நிவர்த்தியடையும் என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கும் பணியில் சென்னை ஐஐடி நிபுணர்களை ஈடுபடுத்துவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.