தென்கொரியாவில் சோகம்

தென்கொரியாவில் சோகம்

தென்கொரியாவில் கடந்த ஒரு வாரமாக  கனமழை பெய்து வருகிறது இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் பல பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கின்றன. கனமழை பெய்து வரும் காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

பள்ளிகளுக்கு முககவசம் அணிந்து வர வேண்டும்

உலகம் முழுவதும் கொரோனா 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எல்லா தொழில்நுட்ப நிறுவங்களும் முடக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகலும் மூன்று மாதங்களாக செயல்படவில்லை இந்த நிலையில் இங்கிலாந்தில் பள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ்  ஜான்சன் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறும்போது இந்த வைரஸ் மிகவும் கொடுமையானது இனிமேலும்  பள்ளிகள் திறக்காமல்  விட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுகின்றன … Read more

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கின் சொத்து மதிப்பு இன்ஸ்டாகிராமின் மூலம் அதிகரித்துள்ளது. டிக் டாக் செயலிக்கு எதிராக மற்றொரு செய்யலியை இன்ஸ்டாகிராமின் மூலம் இன்ஸ்டா ரீல்ஸை அறிமுகம் செய்தது பேஸ்புக் நிறுவனம். இதன் மூலம் வருவாய் ஆனது பல மடங்கு உயர்ந்துள்ளது. ரீல்ஸ் செயலின் அறிமுகத்தால் பேஸ்புக்கின் பங்கானது ஆறு சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக்கின் 13 சதவீத பங்குகள் மார்க் சக்கர்பெர்க் இடம் உள்ளது. இதனால் இவரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து, … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவது பரவி வருகிறது. பல நாடுகளில் கொரோனா வைரசை கட்டுபடுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் கொரோனா வைரசை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூஸிலந்தில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்படவில்லை. இதற்க்கு முக்கிய காரணம் அந்த நாட்டில் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கமே காரணம். இருப்பினும் பொது முடக்கம் நாட்களில் … Read more

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது. இந்த வெடிவிபத்தானது துறைமுகத்தில் உள்ள கப்பலில் தீப்பற்றியதன் மூலம் அங்கு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்ப்பட்டது. இந்த ரசாயணம் விவசாய உரம் தயாரிக்கவும் வெடிமருந்து தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வெடி விபத்தினால் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர் 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த விபத்தானது 43 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

பிரிட்டனில் வினோத சம்பவம்

பிரிட்டனில் வினோத சம்பவம்

பிரிட்டனில் வாடிக்கையாளர் ஒருவர்  ஹாம்ப்ஷியர்  பகுதியில் உள்ள McDonalds நிறுவனத்தில் இருந்து ஆர்டர் செய்த கோழித்துண்டில் முககவசம் இருந்ததால் அதிர்ச்சியானார். அவருடைய 6 வயது மகன் ஆர்டர் செய்த  கோழித்துண்டை சாப்பிடும் போது தொண்டையில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை வெளியே துப்பும் போது அதில் நீலநிறத்தில்  ஏதோ ஒன்றை பார்த்தார். மீதமிருந்த கோழித்துண்டிலும் நீலநிறத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நிறுவனத்திடம் விசாரித்த போது இது எங்கள் உணவகங்களில் சமைக்கப்படவில்லை ஏதோ தவறுதலாக ஏற்பட்டிருக்கலாம் இனிமேல் … Read more

மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே

மீண்டும் பதவி ஏற்கிறார் ராஜபக்சே

இலங்கையில் கடந்த 5- ந் தேதி நடந்த பிரதமருக்கான தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். 225 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் ராஜபக்சே. இந்த வெற்றியை தொடர்ந்து அவர் மீண்டும் அதிபராக இன்று கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் பதவி ஏற்க உள்ளார்.

ஆகஸ்ட் 9 தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க கோரிக்கை

ஆகஸ்ட் 9 தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க கோரிக்கை

ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் கோரிக்கை உள்ளது.நம் இந்திய நாட்டில் பல்வேறு இடங்களில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களின் நாகரீகம் ,பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என சமூகத்தில் வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான கோரிக்கையை பிரதமர் மோடியிடம் கூறியுள்ளனர்.நம் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் இனம் ,ஜாதி ,மதம் போன்றவற்றை பிரித்து வாழும் வகையில் … Read more

அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அனுப்பபடலாம்

அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அனுப்பபடலாம்

ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட காலமாக நீடித்து வந்த போருக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தலிபான் பயங்கரவாதிகளிடம் அமெரிக்கா சிறப்பு  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த  சிறப்பு ஒப்பந்தத்தின் காரணமாக தலிபான் பயங்கரவாதிகள் அமெரிக்காவின் தேச நாடுகளை தாக்காமல் இருப்பதற்காக அங்குள்ள அமெரிக்க இராணுவ வீரர்களை குறிபிட்ட எண்ணிக்கையில் திரும்ப அழைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யபட்டு வந்தன. இந்த சமயத்தில் வீரர்கள் முழுமையாகவே  அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாவாகவே அனுப்பபடலாம் என  தலிபான் பயங்கரவாத … Read more

வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மக்களை குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மக்களை குறிவைத்து மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் கால்நடைச் சந்தை வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. இங்கு கால்நடைகளை வாங்குவதற்காகவும், விற்பதற்காகவும் வருவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏராளமான மக்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு  நடத்தினார்கள். திடீரென நடந்த இந்த தாக்குதலால் பதறிப்போன மக்கள் வெளியே செல்ல முயன்றனர். ஆனால் ஒருவரையும் வெளியே செல்ல விடாமல் சுட்டுத்தள்ளினர்.  இந்த துப்பாக்கிசூட்டில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் சம்பவ … Read more