எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!!

Photo of author

By CineDesk

எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!!

CineDesk

Writer Badri Seshadri Arrested!! BJP leader Annamalai strongly condemned!!

எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!! பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்!!

எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டார். இவர் நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி கருத்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

சில நாட்களுக்கு முன்பு மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநீதியை பற்றியும், உச்சநீதிமன்ற நீதிபதி பற்றியும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் இவர் மீது மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இன்று அதிகாலையில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதற்கு ஏராளமானோர் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பாஜக வின் மாநில தலைவரான அண்ணாமலை பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இவர் கூறி இருப்பாதாவது,

புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு

@bseshadri

அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை

@BJP4TamilNadu

வன்மையாகக் கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?

இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டது குறித்து கண்டனம் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.