ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..

0
131
Yay!!.Next shocker? Don't know what is the coming fever? People in panic?!..
Yay!!.Next shocker? Don't know what is the coming fever? People in panic?!..

ஐயோ!!.அடுத்த அதிர்ச்சி? இப்போ வரும் காய்ச்சல் என்னான்னே தெரியல?பீதியில் பொதுமக்கள்?!..

கோவையில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருவதால், டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சற்று பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் தென்மேற்கு பருவமழை சில பகுதிகளில் மிக அதிகமாக பெய்து வருகிறது.இதனால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றது.இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கொரோனாவா இல்லை டெங்கு காய்ச்சலா என அச்சமடைகின்றார்கள்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவிப்பது என்னவென்றால் கோவையில் காய்ச்சல் என தினமும் 10-15க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். அதில் சிலர் பேர் அன்றே குணமடைந்து வீடு திரும்புகின்றனர். நோய் பாதிப்பு மிக மோசமாக வரும் முன்னரே அதை சமாளிக்க அதற்கு தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

உடலில் ஏதேனும் சில மாற்றம் ஏற்ப்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.அதனை பரிசோதித்து என்ன காய்ச்சல் என்பதை மருத்துவர்தான் ஆய்வு செய்வார்கள்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறுவதாவது,இன்றைய காலம் மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக பழைய டயர், பிளாஸ்டிக் குடங்கள், உரல் போன்ற பொருட்களில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் சுகாதாரத்துறையினர் தொடர் ஆய்வு செய்து வருகின்றார்கள் .இதையும் மீறி மழைநீர் தேக்கி வைத்தவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.இதனால் பொதுமக்கள் அனைவரும் விழித்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Previous articleகுட் நியூஸ்! நீங்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறீர்களா? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
Next articleமுககவசம் அணியாதவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் வசூல்!சென்னை மாநகராட்சி!