கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0
151
Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!
Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் தற்போது ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் புகுதிகளில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.

மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு வீசக்கூடும். இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் கனமழை துவங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த காலநிலை மாற்றங்களால் ஜூலை மாதம் இரண்டாம் தேதி அன்று நீலகிரி, கோயம்புத்தூர், கடலூர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஜூலை மாதம் மூன்றாம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதகவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

Previous articleடெலிகிராமின் சூப்பரான அப்டேட்!! குஷியில் பயனாளர்கள்!!
Next articleமுதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!