மஞ்சள் மற்றும் உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை 2 நிமிடத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்யலாம்!!

0
92
#image_title

மஞ்சள் மற்றும் உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை 2 நிமிடத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுத்தம் செய்யலாம்!!

நம் வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*சீகைக்காய் தூள் – 2 பாக்கெட்

*புளித்த தயிர் – 1/2 கப்
(அல்லது)
புளித்த அரிசி மாவு

*ஷாம்பு – 2 பாக்கெட்

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் சீகைக்காய் தூள் 2 பாக்கெட் அல்லது உங்கள் பாத்ரூமை சுத்தப்படுத்த தேவையான அளவு சீகைக்காய் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் 1/2 கப் புளித்த தயிர் அல்லது அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் 2 பாக்கெட் ஷாம்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை பாத்ரூம் முழுவதும் தெளித்து விடவும். 10 முதல் 15 நிமிடம் வரை இந்த கலவையை ஊற விடவும். பிறகு பாத்ரூம் பிரஷ் அல்லது தேங்காய் நார் கொண்டு கறை படிந்த இடத்தில் தேய்த்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்தால் நாள்பட்ட மஞ்சள் கறை, உப்பு கறை, பாசி உள்ளிட்டவை நீங்கி பாத்ரூம் பளிச்சிடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*செங்கல்

*காய்ந்த எலுமிச்சை பழம்

*தூள் உப்பு

*வாஷிங் பவுடர்

செய்முறை:-

ஒரு செங்கலை எடுத்து உடைத்து தூள் செய்து கொள்ளவும். இதை ஒரு ஜல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பவுலில் தேவையான அளவு சலித்த செங்கல் தூளை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் காய்ந்த எலுமிச்சை பழம் 3 முதல் 4 எடுத்து நறுக்கி அதன் சாற்றை செங்கல் தூளில் பிழிந்து கொள்ளவும்.

அடுத்து மற்றொரு பவுலில் தண்ணீர் ஊற்றி பிழிந்த எலுமிச்சை தோலை போட்டு ஊற விடவும்.

பிறகு செங்கல் தூள் உள்ள பவுலில் தூள் உப்பு 2 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக 2 முதல் 3 தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் எலுமிச்சை தோல் ஊற வைத்த தண்ணீர் அதில் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை ஓரு ஸ்க்ரப்பரை போட்டு பாத்ரூமில் படிந்துள்ள மஞ்சள் உப்பு கறைகள் மீது தேய்த்து கொள்ளவும். பின்னர் 20 முதல் 30 நிமிடம் வரை ஊற விடவும். பிறகு தண்ணீர் கொண்டு பாத்ரூம் முழுக்க சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்தால் சில நிமிடங்களில் பாத்ரூம் டைல்ஸ் புதிது போன்று பளிச்சிடும்.

Previous articleSBI வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு!! பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!
Next articleஉங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல்? 5 நிமிடத்தில் சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியம்!!