பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடைக்கும் மஞ்சள் கறைகளை வெறும் 10 நிமிடத்தில் நீக்கி பளிச்சென்று மாற்றி விடலாம்!!

0
95
#image_title

பாத்ரூம் டைல்ஸில் படிந்து கிடைக்கும் மஞ்சள் கறைகளை வெறும் 10 நிமிடத்தில் நீக்கி பளிச்சென்று மாற்றி விடலாம்!!

நம் வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதை போல் பாத்ரூமையும் சுத்தமாக வைத்து கொள்வது அவசியம்.பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்திருந்தாலோ,துர்நாற்றம் வீசினாலோ பாத்ரூம் பயன்படுத்த மிகவும் சிரமமாக இருக்கும்.இப்படி படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகளை 5 நிமிடத்தில் சுத்தம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த முறைகளை பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*வினிகர் – தேவையான அளவு

*விம் சோப் – 1

*சமையல் சோடா – தேவையான அளவு

*பிரஸ் – 1

செய்முறை:-

முதலில் 1 விம் சோப் எடுத்து ஒரு பவுலில் போட்டுக் கொள்ளவும்.அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

அடுத்து இன்னொரு பவுல் எடுத்து அதில் மஞ்சள் கறைகளை நீக்க தேவையான அளவு வினிகர் சேர்த்துக் கொள்ளவும்.அதோடு தேவையான அளவு சமையல் சோடா சேர்த்து ஒரு குச்சி அல்லது ஸ்பூன் கொண்டு கலந்து விடவும்.

இந்த கலவையை கரைத்து வைத்துள்ள விம் சோப் கலவையில் சேர்த்து நன்கு கலக்கிகொள்ளவும்.

பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பாத்ரூமில் மஞ்சள் கறைகள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும்.10 நிமிடம் வரை விட்டு பின்னர் ஒரு பிரஸ் கொண்டு கறைகள் மீது தேய்க்கவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி அடித்து விடவும்.இவ்வாறு செய்தால் பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்கி பளிச்சிடும்.

பாத்ரூம் மஞ்சள் கறை நீங்க வேறு சில வழிகள்:-

*கோலமாவு ஒரு கைப்பிடி எடுத்து பாத்ரூமில் மஞ்சள் கறைகள் இருக்கும் இடங்களில் தூவி விடவும்.பின்னர் 15 நிமிடம் கழித்து பாத்ரூம் பிரஸ் பயன்படுத்தி மஞ்சள் கறைகள் இருக்கும் இடத்தில் தேய்த்து கழுவி விடவும்.இவ்வாறு செய்தால் டைல்ஸில் உள்ள மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்கி விடும்.

*அதேபோல் சமையல் சோடா தேவையான அளவு எடுத்து பாத்ரூமில் மஞ்சள் கறைகள் இருக்கும் இடங்களில் தூவி விடவும்.பின்னர் 15 நிமிடம் கழித்து பாத்ரூம் பிரஸ் பயன்படுத்தி மஞ்சள் கறைகள் இருக்கும் இடத்தில் தேய்த்து கழுவி விடவும்.இவ்வாறு செய்தால் மஞ்சள் கறைகள் முழுமையாக நீங்கி விடும்.

Previous articleஒரு இரவில் காது ஓட்டையை சரி செய்வது எப்படி? எளிய வழி இதோ!!
Next articleமூட்டு வலியை நொடி பொழுதில் விரட்ட இதை செய்யுங்கள்!! 100% தீர்வு தரும் பாட்டி வைத்தியம்!!