30 வயதுக்குள் இருக்கிறீர்கள்.. ஆனால் தலையில் வெள்ளை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா..? அப்போ இந்த ஹேர் டை உங்களுக்கானது..!!

0
93
#image_title

30 வயதுக்குள் இருக்கிறீர்கள்.. ஆனால் தலையில் வெள்ளை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா..? அப்போ இந்த ஹேர் டை உங்களுக்கானது..!!

இன்றைய உலகில் இளம் வயதினர் சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை. இவை உணவுமுறை பழக்கம், வாழக்கை முறை மாற்றம், கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்தல், ஜீன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது. இந்த இளநரை பாதிப்பை சரி செய்ய இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஹேர் டை தயார் செய்து தலைக்கு உபயோகித்து வருவதன் மூலம் இளநரை நிரந்தரமாக கருப்பாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*கறிவேப்பிலை – 1 கைப்பிடி

*செம்பருத்தி இலை – 1 கைப்பிடி

*அவுரி இலை – 1 கைப்பிடி

*செம்பருத்தி பூ (இதழ்) – 2 கைப்பிடி (மகரந்தம் நீக்கியது)

*பீட்ரூட் – 1 (தோல் நீக்கி நறுக்கியது)

*நெல்லிக்காய் – ஒரு கைப்பிடி(விதை நீக்கியது)

*கொட்டை பாக்கு – 1/2 கைப்பிடி

*மருதாணி – 1/2 கைப்பிடி

*தேயிலை தூள் – 1/2 கைப்பிடி

செய்முறை…

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடித்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து தயார் செய்து வைத்துள்ள பொடியில் 5 தேக்கரண்டி அளவு சேர்த்து கருப்பாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

அடுத்து இதை ஒரு நாள் முழுவதும் ஆறவிட்டு மறுநாள் தலையில் அப்ளை செய்து 1 மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தோம் என்றால் நரை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.