ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!!

0
161
You can't run for years with one win!! Arun Vijay won the jackpot due to actor Surya's decision!!
You can't run for years with one win!! Arun Vijay won the jackpot due to actor Surya's decision!!

 ஒரு வெற்றியை வைத்து வருட கணக்கில் ஓட்ட முடியாது!! நடிகர் சூர்யா முடிவால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்!!

நடிகர் அருண் விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இடத்தில் உள்ளார். அவரது கடுமையாக முயற்சி செய்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி உழைக்கும் குணம் கொண்டவர்.

தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார்  அவர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த கால கட்டத்தில் தான் அருண் விஜய் அவரும் நடிக்க தொடங்கினார்.

இவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் கிடைத்ததே தவிர வெற்றி ஹீரோ என்ற அடையாளம் கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் இயக்குனர் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அருண் விஜய் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.இதில் அவர் நடித்திருந்த விக்டர் என்னும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு அவருக்கு அதிக அளவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.ஆனால் அது எதுவும் ரசிகர்களிடையே பெரிதாக பேசும் படி அமையவில்லை.

இவர் எவ்வளவு நல்ல நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருந்தாலும்  இவருக்கும் வெற்றி என்பது எப்பவும் எட்டா கனியாகவே இருந்தது.

இவ்வாறு வெற்றிக்காக ஏங்கி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நடிகர் சூர்யா எடுத்த முடிவால் அருண் விஜய்க்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா அவர்கள் வணங்கான் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் எந்த காரணமும் இல்லாமல் படத்தை விட்டு வெளியேறினார்.

இதன் மூலம் இந்த பட வாய்ப்பு அருண் விஜய் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் அவரது சினிமா கெரியருக்கே  திருப்பு முனையாக  அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous articleஇன்ஸ்டாவில் சிறுமியுடன்  நட்பு !! ஆவலாக பார்க்க வந்த மாணவர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!! 
Next articleசூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை ரீலீஸ்!! மாஸ் அப்டேட்ஸ்!!