நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!!

Photo of author

By Rupa

நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!!

திமுக ஆட்சி திராவிட மாடல் என்று கூறுகின்றனர் ஆனால்  அதற்கு எதிராக தான் அனைத்தையும் செய்து வருகிறது. கொலை மிரட்டல், கொள்ளை போன்றவை திமுக ஆட்சியில் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தினந்தோறும் திமுக நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பலர் அதனை தவறாக உபயோகிப்பதை  நாம் பார்த்து தான் வருகிறோம். அந்த வகையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் கவுன்சிலர் தான் ஆதி மகேஸ்வரி.அவரின் கணவர் ஓர் அதிகாரியை போல அலுவலகத்திற்கு சென்று அனைவரையும் மிரட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.இவர் அதிகாலை ஆறு மணிக்கு சுகாதார அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவ்வாறு வந்தவர் ஆய்வாளர் இருக்கையில், இவர் ஏதோ ஆய்வாளர் போல் அமர்ந்து உள்ளார்.

அங்கு பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து, யார் யார் எந்தெந்த நாட்களில் வந்துள்ளனர் என பார்த்துள்ளார். மேலும் அங்கிருந்த சுகாதார பணியாளர்களையும் அதிகார தோரணையில், எந்தெந்த சுகாதார பணியாளர்கள் எந்தெந்த இடத்தில் உள்ளார்கள் என்பதை தன்னிடம் கூறுமாறும் தெரிவித்துள்ளார். நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும் என அங்குள்ள பணியாளர்களை மிரட்டி உள்ளார். கவுன்சிலர் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் அவரது கணவர் அதிகாரத்துடன் கேட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. திடீரென்று அலுவலகத்திற்கு வந்து இவ்வாறு கேட்டதும் அங்குள்ள பணியாளர்களுக்கு  அதிர்ச்சியாக  இருந்தது.

அதனால் பொறுக்க முடியாமல்,இவருக்கு பொறுப்பை கொடுத்து இவ்வாறு கேள்வி கேட்க வேண்டும் என்று கூறியது யார்? அதுமட்டுமின்றி இவர் சுகாதார ஆய்வாளரா? இவர் ஏன் எங்களை மிரட்டுகிறார் …இவ்வாறு கோவை மாநகராட்சி ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை பணியாளர்கள் வைத்துள்ளனர். நிர்வாகத்தின் பொறுப்பாளர் தான் கேள்வி கேட்க வேண்டும், அவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு நாங்கள் ஏன் பதில் கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முன்னதாகவே இது போல் சில பிரச்சனைகள் வந்த பொழுது கவுன்சிலரின் கணவர்கள் நிர்வாகங்களில் தலையிடக்கூடாது என முதல்வர் கூறியிருந்தார். அவ்வாறு கூறியிருந்தும் தற்பொழுது கவுன்சிலர் கணவர் இவ்வாறு பணியாளர்களை அதட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வரலாகி வருகிறது.