இளம்பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை வழக்கு-குற்றவாளி சந்தீப்புக்கு மனநல பரிசோதனை!
கேரளா மாநிலத்தையே உலுக்கிய கொல்லம் கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் போலீசாரால் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தீப் மருத்துவ பரிசோதனையின் போது மருத்துவர் வந்தனாதாஸை அங்கிருந்த கத்தரிக்கோலால் குத்தி படுகொலை செய்தார்.
இந்த படுகொலையை செய்த போதை ஆசிரியர் சந்தீப்பை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டு பூஜாப்புரா சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் நேற்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக ஐந்து நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். நேற்று கொல்லம் ரூரல் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, குற்றவாளியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் குற்றவாளி சந்தீப்பின் உடல் மற்றும் மனநிலையை பரிசோதிப்பதற்காக மருத்துவ குழு இன்று பரிசோதனை செய்யவுள்ளனர். திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு சந்தீப்பை பரிசோதனை செய்யவுள்ளனர். நேற்று புனலூர் தாலுகா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சந்தீப்பின் இடது காலில் எலும்பு முறிவு காணப்பட்டது.
இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.சந்தீப்பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் , ஆதாரங்கள் சேகரிக்க கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து செல்ல விசாரணைக் குழு முடிவு செய்தது.சந்தீப் காலில் எப்படி காயம் ஏற்பட்டது,கையில் எப்படி கத்தரிக்கோல் வந்தது,மருத்துவரை கொலை செய்ய காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.