மனிதர்களாகிய நாம் என்றும் ஒரு துணையோடு இருப்பது வழக்கம் ஆகும். ஆனால் அந்த துணை மனிதராகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. அவை செல்லப்பிராணிகளாக கூட இருக்கலாம். அவ்வகையில் நம் மக்கள் நாய்,பூனை,மைனா,கிளி,புறா போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.
ஆனால் மேற்குறிப்பிட்ட பிராணிகள் அவர்களை விட்டு இறந்து போகும் போதோ அல்லது மாயமாகும் போதோ அதனை வளர்த்த மனிதர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். அந்த பிரிவை அவர்களால் தாங்க முடியாது.
கூடலூரில் தான் வளர்த்த கிளி கூண்டை விட்டு பறந்து சென்று விட்டதால் தன் உயிரை விஷம் குடித்து மாய்த்துக் கொண்டாள். இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தொழிலாளி ராமசாமி என்பவர் தனது மனைவி ஜனிதா மற்றும் அவர்களது ஒரே மகளான சுஜித்ரா இவர்களுடன் கூடலூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சுஜித்ராவிற்கு பத்து வயது ஆகிறது. தோட்ட தொழிலாளிகள் ஆன ராமசாமி மற்றும் ஜனிதா தம்பதியர் தினமும் வேலைக்கு சென்று விடுவார். அந்த நேரத்தில் சுஜித்ரா தான் செல்லமாக வளர்த்து வரும் கிளியுடன் தினமும் விளையாடி வருவார்.
கடந்த 22ஆம் தேதி இந்த தம்பதியர் வேலை முடித்து வீட்டிற்கு வந்துள்ள போது அவர்களது மகள் வாயில் நுரை தள்ளியபடி இருந்துள்ளார். என்னவென்று பயந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு வெறும் முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து இவர்கள் கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். ஆனால் ஆகஸ்ட் 24-ம் தேதி அன்று சுஜித்ரா தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தைக் குறித்து அங்குள்ள போலீசார் கூறுகையில்,” சுசஜித்ரா தான் வளர்த்து வந்த கிளியை கூண்டில் இருந்து திறந்து விட்டுள்ளார். அந்த கிளி பறந்து சென்றுவிட்டது. இதனை அறிந்த சுஜித்ரா,பெற்றோர்கள் வந்தால் திட்டுவார்கள் என அஞ்சினார். அதோடு மட்டுமல்லாமல் தான் ஆசை. ஆசையாக வளர்த்து வந்த கிளி பறந்து விட்டது என்ற சோகத்திலும் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது பெற்றோர் வரும் போது இவர் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். மேலும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்” என்றனர்.
தான் வளர்த்த கிளிக்காக தன் உயிரையே மாய்த்துக் கொண்ட இச்சிறுமியின் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை மிகவும் கவனமான முறையில் வளர்க்க வேண்டும். அவர்களை எதற்கு எடுத்தாலும் கண்டிக்காமல் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொண்டால் அவர்கள் உண்மையை மறைக்க மாட்டார்கள்.