கந்து வட்டி வசூலித்தால் கைது : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

0
78

கொரோனா காலத்திலும் கந்து வட்டியின் கொடுமை நீடித்து வருகிறது. வட்டி கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியிருக்கிறார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ்.

கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி போன்றவர்களால் மாதம்தோறும் பணம் கொடுக்கப்பட்டு வரும் மக்கள், பணம் கட்ட முடியாததால் உயிரிழந்த ஒரு குடும்பத்தின் பின்னணியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இந்த ஆலோசனையை மக்களிடம் வழங்கினார் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிதி வழங்கும் நிறுவனங்களிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் கடன் வசூலிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நோட்டீஸ் விட வேண்டும் என்று அவர் கூறினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவரான திருச்செங்கோடு, கைலாசம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளர் சுப்பிரமணியம், கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தார்.குடும்ப சூழ்நிலையின் காரணமாக வட்டிக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
கடனை சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபி, ஆத்தூரை சேர்ந்த அய்யாசாமி, மற்றும் சேலம் அம்மாபேட்டை யைச் சேர்ந்த வைரவேல் ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளார்.குடும்ப வறுமை காரணமாக, வாங்கிய கடனை திருப்பி தர காலதாமதமாகியது. இதனால் கந்து வட்டி கடன் கொடுத்தவர்கள்,மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் சுப்பிரமணியனை தகாத வார்த்தையில் பேசியிருக்கின்றனர்.இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளான சுப்பிரமணியன் குடும்பத்தினர் அனைவரும் விஷம் குடித்து தற்கொலை  செய்துகொள்ள முயன்றுள்ளனர்.ஆனால் தாய் தந்தை இருவரும் இறந்து,இரண்டு குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்நிலையில் கந்துவட்டிக்காரர்களின் அத்துமீறலை தடுக்கும் பொருட்டு, உயிரிழப்புகள் ஏற்படாமல் காக்கும் வகையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தனியார் நிதி நிறுவனங்களிடம் இன்று பேசினார். நிதியை வசூலிக்கும் பொழுது அரசு சட்டத்தின் படியே வசூல் செய்யப் படவேண்டும் என்றும்,முதலில் பணத்தை கேட்டு நோட்டீஸ் விட வேண்டும் என்றும் பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.இது போன்ற செயல்களை தடுக்க கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் நிதி நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

author avatar
Parthipan K