இளநரை? 2 தேக்கரண்டி டீத்தூள் இருந்தால் ஒரே நாளில் அனைத்து வெள்ளை முடிகளையும் கருமையாக்கி விடலாம்!!

Photo of author

By Divya

இளநரை? 2 தேக்கரண்டி டீத்தூள் இருந்தால் ஒரே நாளில் அனைத்து வெள்ளை முடிகளையும் கருமையாக்கி விடலாம்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தலை முடியை கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*டீத்தூள் – 2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

*மருதாணி இலை – 2 கைப்படி அளவு

*கிராம்பு(இலவங்கம்) – 3

*கருப்பு மிளகு – 10

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். டீத்தூளின் நிறம் தண்ணீரில் இறங்கி சுண்டி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

இந்த தண்ணீரை ஆறவிட்டு ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 2 கைப்பிடி அளவு மருதாணி இலை, 3 கிராம்பு(இலவங்கம்), 10 கரு மிளகு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் வடிகட்டி வைத்துள்ள டீத்தூள் தண்ணீரை அதில் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பவுலில் அரைத்த கலவையை சேர்த்து கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். இந்த பேஸ்டை 10 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

பின்னர் இந்த பேஸ்டை தலை முடிகளுக்கு அப்ளை செய்யவும். முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி மஜாஜ் செய்து கொள்ளவும். இதை 1 மணி நேரம் தலையில் ஊற விட்டு பின்னர் தலையை அலசவும். இந்த ரெமிடியை வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு உபயோகித்து வந்தோம் என்றால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட தென்படாது.