இளைஞர்களே உங்களுக்காகத்தான்!! சுயத்தொழில் தொடங்க அருமையான வாய்ப்பு!!
தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்காக அரசாங்கம் கடன் வழங்கி வருகிறது. இதற்காக ஐந்து லட்சம் வரை கடன் தருகிறது.
மேலும் 1.25 லட்சம் வரை மானியம் கிடைக்கும். இந்த கடனுக்கு வட்டியும் குறைவாகவே உள்ளது. இந்த தொகையை பயன்படுத்தி இளைஞர்கள் அனைவரும் தொழில் துவங்கி முன்னேற வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கூறியுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில்களை உருவாக்கி அதன்மூலம் சுயவேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கம் கொண்டு இந்த வேலை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறி உள்ளார்.
இது மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 15 லட்சமாகவும், இதற்கான மானியம் ரூபாய் 3 லட்சத்து 75 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த மானியம் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2023-2024 ஆம் நிதியாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியானது கடன் திட்ட பயனாளிகளுக்கு இணையதளம் மூலமாக வழங்கப்படுகிறது.
இதில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொண்டு அறியலாம்.
இந்த திட்டம் தேனி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து கடன் வழங்கி அவர்கள் முன்னேற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதில் கூறப்படுகிறது.

