நடிகர்களை போல தாமும் எப்படியாவது பிரபலமாக வேண்டும் எனும் இடத்தில் சில சாமானிய மக்கள் செய்யும் முட்டாள்தனமான காரியங்களில் சர்ச்சைகளில் முடிகிறது. அவ்வகையில் சிலர் வினோதமான செயல்களை செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தன்னை பிரபலமாகி கொள்கின்றனர். ஆனால் அதுவே சிலருக்கு விபரீதமாக முடிகிறது.
அவ்வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் மீன் சமைத்து சாப்பிடுவது போல் பாம்பை சமைத்து ஒருவர் சாப்பிட்டு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாம்பை கண்டால் படையும் அஞ்சும் என்னும் பழமொழிக்கு ஏற்றார் போல் நம் வழக்கங்களில் பாம்பை சமைத்து உணவு உண்பது என்பது ஆச்சரியமான விஷயம்தான். வெளிநாடுகளில் பாம்பு கறி சாப்பிடுவது வழக்கமாக இருந்தாலும் இங்கு அது அவ்வளவு பழக்கமான ஒரு செயலாக இல்லை.
சேலம் மாவட்டம் மேட்டூர் மாநகராட்சி தங்காபுரிபட்டினம் வட பத்ரகாளியம்மன் கோவில் பகுதியில் நான்கு இளைஞர்கள் ஒன்று கூடி ஆறு அடி நீளமுள்ள ஒரு பாம்பை மீன் வெட்டுவது போல் வெட்டி பாம்பை சமைத்து சாப்பிட்டனர். இக்காரியத்தை மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதி விட்டனர்.
தகவலறிந்த வனத்துறையினர் அவர்களை தேடி வந்தனர். அலுவலர் பிரகாஷ் குமார் தலைமையில் சென்ற வனத்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ்குமார் 30 என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அதோடு மட்டுமல்லாமல் மேலும் இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
அதோடு இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் ஆன பொது இடங்களில் மது அருந்துவது, சூதாடுவது , கோவிலுக்கு வரும் பெண்களை கேலி செய்வது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இந்த பாம்பு கறி சாப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் நடவடிக்கை எடுக்காமல் மேற்கொண்ட சில சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.