Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Photo of author

By CineDesk

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

CineDesk

Youtube video caused incident to boy!! Parents in shock!!

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

தினம் தோறும் ஏராளமான அதிர்ச்சி சம்பவங்களை தொலைகாட்சியிலும், ஊடங்களிலும் பார்த்து வருகிறோம். அதுப்போலவே தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிரிசில்லா என்னும் பகுதியில் உதய் என்ற பதினொரு வயதான சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் எப்பொழுதுமே யூடியூபில் வருகின்ற வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றி வருவது வழக்கம்.

இதனைத்தொடர்ந்து இவர் ஒருநாள் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு மொபைலை எடுத்துக்கொண்டு சென்று அறையை தாழ்ப்பாள் இட்டுக்கொண்டுள்ளார்.

பிறகு சிறுவனின் பெற்றோர்கள் வெகு நேரமாக கதவைத் தட்டியும் அவர் பதிலளிக்கவில்லை. மொபைலுக்கு அழைப்பு விடுத்து பார்த்தும் எந்த ஒரு பதிலும் அறையில் இருந்து வரவில்லை.

இதனால் பதற்றமதைந்த சிறுவனின் பெற்றோர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சிறுவன் தூக்குப் போட்டுக் கொண்டது தெரிய வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் சிறுவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஒருவேளை சிறுவன் யூடியூபில் வரும் வீடியோக்களை பின்பற்றி அப்படியே செய்வதால் இதையும் அதில் பார்த்து தான் செய்திருப்பாரோ என்று காவல் துறையினர் யூகித்து வருகின்றனர்.

எனவே, குழந்தைகளிடம் போனை முழு சுதந்திரமாக தருவதை நிறுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.